vana durga peedam

About

ஜெய்பிரத்யங்கிரே!! ஜெய் ஜெய்பிரத்யங்கிரே !!!

பிரத்யங்கிரதாசன் சுவாமிஜின் பெற்றோர் முருகடிமை துரைராஜ் மற்றும் ராஜலக்ஷ்மி அவார். திரு.முருகடிமை துரைராஜ் அவர்கள் ஜோதிடத்துறையில் வல்லவர், பலதரப்பட்ட மக்களின் வாழ்வின் இன்னல்களுக்கு ஜோதிட ஆலோசனையும் பரிகாரமும் கூறி அவர்களின் வாழ்வு மேலோங்க நின்றவர் மேலும் ஜோதிட ஆர்வலர்களுக்கு பயனுள்ள என்னனாற்ற ஜோதிட நூல்களை எழுதியவர். திருமுதுகுன்றம் என்னும் விருத்தாசலத்தில் வசித்து வந்தவர்களுக்கு தொடர்ந்து முன்று பெண் பிள்ளைகள் பெற்றனர்.

தீவிர முருக பகத்தரன சுவாமிஜின் தந்தை திரு.முருகடிமை துரைராஜ் அவர்கள் ஆண் குழந்தை வேண்டி மதம்தொரம் சஷ்டி விருதாம் மேற்கொள்ள தொடங்கினர் ஆண்டு தோறும் வரும் மகாகந்தசஷ்டியில் எழுநாட்களும் உண்ணாமலும் எழோம்நாள் மௌனவிரதமும் மேற்கொண்டார் இதன்பலனாக திரு. முருகடிமை துரைராஜ் மற்றும் ராஜலக்ஷ்மி தம்பதியருக்கு நான்கவதாக முதல் ஆண் குழந்தை 1979 ஆம் ஆண்டு மார்கழி திங்கள் காசிக்கு நிகராக கருதும் விருத்தகாசி எனப்படும் விருத்தாசலத்தில் பிறந்தார்.

குழந்தை பருவம் முதல் இறைவழி பாட்டிலும் ஜோதிடத்திலும் பற்றும் ஆர்வமும் கொண்ட ப்ரத்யங்கிராதாச ஸ்வாமிகள் தன் எட்டு வயதில் தன் தந்தையும் குருவுமான திரு.முருகடிமை துரைராஜின் வழிகட்டுதளின்படி ஜோதிடதுறையில்அடி எடுத்வைத்தர்.

கோவிலில் நடந்தா உறவினரின் இல்ல சுபநிகழ்ச்சியில் மற்ற குழந்தைகளுடம் விளையாடி கொண்டிறிந்த போது ராஜாநகம் வந்து சிறியது மற்ற குழந்தைகள் எல்லாம் ஓடிவிட ப்ரத்யங்கிராதாச ஸ்வாமிகள் மட்டும் அதே இடத்தில் நின்று கொண்டு இருந்தர் சிறிது நேரம் படம் எடுத்து அடிய ராஜாநகம் முன்று முறை பூமியில் கோத்தி சாத்தியம் செய்து விட்டு சென்றது இந்த சம்பவத்திற்கு பின் சுவாமிஜியின் ஜோதிட ஆற்றலும் ஆன்மிகத்தில் இடுபாடும் மேலோங்கியது.பத்து வயதில் ஜோதிட சிம்மம் புலியூர் பாலுவின் தலைமையில் ஒருஜோதிட மாநாட்டில் மேடையில் பேசி போரும் ஜோதிடர்களின் பார்வையை ஈர்த்து ஜோதிடதிலகம் என்னும்பட்டதை தன் பத்து வயதில் பெற்றர் அதன் பிறகு பலபட்டங்களை பெற்று பரிகார செம்மளாக திகழ்கிறார் நம் ப்ரத்யங்கிராதாச ஸ்வாமிகள்.

பள்ளி படிப்பை திருவல்லிக்கேணி இந்து மேல்நிலை பள்ளியில் பயின்ற சுவாமிஜி தன் சகமாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஜோதிட ஆலோசனைகளை வழங்கிவந்தார். பள்ளி பருவத்தில் துர்க்கை வரவழிபட்டு குழு, சங்கடகஹர சதுர்த்தி மற்றும் சஷ்டி மதவழிபட்டு குழு என்று தொடங்கி சகமாணவர்களுக்கு இந்த வழிபாட்டினால் வரும் நன்மையை எடுத்து கூறி இறை நண்பிக்கையை வளர்த்தவர்.

சுவாமிஜிதன் தந்தை மேற்கொண்ட மகாகந்தசஷ்டியில் விருததை தன் பள்ளிபருவத்திலேயே மேற்கொள்ளத்துடங்கினார் பள்ளி பள்ளிபருவத்திலேயே தன் தந்தையிடம் பல மந்திரங்களை உபதேசம் பெற்று இருந்த ப்ரத்யங்கிராதாச ஸ்வாமிகள் .ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா மந்திரதையும் உபதேசம் பெற்றுஇருந்தார்.

வாரம்தோறும். செவ்வாய்கிழமைகளில் திருவேற்காட்டில் உள்ள பிரத்யங்கிரவை தரிசனம் செய்துவதுடன் மாதம்தோறும் அம்மாவாசையில் ப்ரத்யங்கிரா சன்னிதானம் வாயிலில் தங்குவது வழக்கமாக கொண்டு இருந்தர். அப்படி ஒருநாள் தங்கும் போது நள்ளிரவில் பச்சை நிறத்தில் பாவாடை சட்டையும் தலைநிறைய பூ வைத்த ஒரு சிறுமி, சுவாமிகளை எழுப்பிப்ரத்யங்கிரா அருளலும் ஆசியும் என்றும் உண்டு என்று கூறிமறைந்தது மெய்சில்ர்த்தசுவாமிகள் தன் முன் வந்தது பாலாப்ரதய்ங்கிரா என்பதை உணர்ந்து அம்பாளை வணங்கினர். சுவாமிஜிக்கு தன் தந்தை மற்றும் இன்றி படப்பை ஜெயா துர்கா பீடம் ஸ்ரீ லா ஸ்ரீ துர்க்கை சித்தரையும், சென்னை திருவான்மியூரில் உள்ளா பாம்பன் சுவாமி கோவிலில் பௌர்ணமி அன்று நள்ளிரவு பூஜை செய்து வரும் ஸ்ரீ ஸ்ரீ ராமானுஜ சுவாமிகளையும், பல்லடம் அதர்வண பத்ரகாளி பீடம் ஸ்ரீ ஸ்ரீ தத்தகிரி சாம்பசிவ ரிஷிச்வர சுவாமிகளையும் குருவக கொண்டவர். சுவாமிஜி தன் வாலிபபருவத்தில் ஒழுக்க நெறிதவறிய தன் சகநன்பர்களுக்கு ஒழுக்கத்தை அதன் அவசியத்தையும் போதித்தார் தன்னுடன் இறக்கும் சகநன்பர்களை வைத்து இறைபணி அமைப்பு ஒன்று ஏற்படுத்தி சென்னை திருவான்மியூரில் உள்ளா பாம்பன் சுவாமிகோவிலில் பௌர்ணமி அன்று நள்ளிரவு பூஜை செய்து வந்த ஸ்ரீ ஸ்ரீ ராமானுஜ சுவாமிகளுக்கும் அங்கு வரும் அடியார்க்கும் இறைபணி சேவை செய்து வந்தார், இதே அமைப்பை பயன்படுத்தி இரத்ததான முகம், உடல் உருப்புதன முகம், மருத்தவ முகம், அன்னதானம் போன்ற பொது சேவையும் செய்து வந்தார்.

சுவாமிகளின் அன்மீக ஈடுபட்டையும் தொடர்ந்து செய்யும் இறைசேவையை பார்த்த அவரது தயார் திருமண வாழ்கையில் இடுபாடு இன்றி இருப்பதை என்னி வருந்தி சுவமிஜியின் குருமர்கலான ஸ்ரீ லா ஸ்ரீ துர்க்கை சித்தரிடம்மும், ஸ்ரீ ஸ்ரீ ராமானுஜா சுவாமிகளிடம் கூறினார். அவர்களின் அறிஉறைப்படி அவர்களை போல குடும்ப வாழ்கையில் இறந்து கொண்டு அன்மீகசேவை செய்து வருகிறார்.

தன் தாய் தந்தை சகோதர சகோதிரிகளுடன் கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்து வரும் சுவாமிஜியின் விட்டில் ஆடி மாதத்தில் கூழ்வத்தல் நிகழ்ச்சி நடந்த போது உச்சி வேளையில் ஓரூ நாகம் வீட்டினுள் வந்து படம் எடுத்து ஆடியது, அனைவரும் பயந்தநிலையில் சுவாமிஜி நாகத்திற்கு தீபாஆராதனை செய்து வழிப்பட்ட உடன் அந்த நாகம் சுவாமிஜியின் குழந்தை பருவத்தில் நடந்ததை போல் மூன்று முறை தரையில் கொத்தி சாத்தியம் செய்து விட்டுப்பானது. குடியிருப்பு பகுதியான அந்தபகுதியில் அக்கம் பக்கம் எங்கும் புதர்கள் இல்லாத நிலையில் வீட்டினுள் அதுவும் அந்த தருணத்தில் வந்ததுதான் மிகவும் தெய்வாம்சமான செயல்.

எட்டு வயது முதல் ஆன்மிகத்திலும் ஜோதிடத்துறையில் இருக்கும் சுவாமிகள் மக்கள் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் கர்மவினைபயன்தான் காரணம் என்றும். கர்மவினையை எவ்வாறு கலைத்து வெல்வது என்று ஆராச்சி செய்தவர் இறுதியாக இருப்பதுஎழு நட்சத்திரங்கள், பதிணைந்து திதிகள்,பண்ணீராண்டு ராசிகள்,ஒன்பது நவகிரகங்களையம் அடக்கி ஆளும் நவகிராக நாயகியான அகிளண்டக்கோடி பிரம்மாண்ட பரம்போருளான ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரதேவி ஒருவளள் மட்டுமே கர்மவினையை களைத்து வெல்ல முடியும் என்பதை தன் ஆராச்சியின் மூலமாக தெரிந்து அதற்கான பரிகரத்தையும் அறிந்துணர்ந்து மக்களுக்கு அதன் வழிமுறைகளை கூறி வாழ்வில் வளம் பெறசெய்கிறார்..

சண்டி ஹோமா விற்பன்னரான ப்ரத்யங்கிராதாச ஸ்வாமிகள் ப்ரத்யங்கிரா தீட்சையை ப்ரம்ம ஞனமாக பெற்றவர். கடந்த இருபது வருடங்களாக குருபெயர்ச்சி ஹோமம், சனிபெயர்ச்சி ஹோமம், ராகுகேதுபெயர்ச்சி ஹோமம், சண்டிஹோமம், ப்ரத்யங்கிரா ஹோமம் போன்ற ஹோமமங்களை உலக ஷேமத்திர்ககவும் தன்னிடம் வரும் அடியார்களின் சகலஐஸ்வர்யா சௌபாக்கிய சுகநலனிற்காகவும் செய்துவருகிறார்.

உலகில் முதல் முறையாக வேறு எவரும் கூறாத எளிய ராகுகால பூஜை தீப வழிபாட்டு பூஜை முறையை துன்பப்படும் பக்தர்களுக்கு எடுத்துரைத்துவருகிறார் ஸ்ரீ ஸ்ரீ ப்ரத்யங்கிராதாஸ ஸ்வாமிகள். ஸ்ரீமஹாப்ரத்யங்கிர தேவியின் மூலமந்திரத்தை அனைவராலும் உச்சரிப்பது கடினம் என்பதினால் உலகில் உள்ள அனைவரும் எப்போழுதுமே அம்பாளின் பெயரை உச்சரித்து கொண்டு இருக்க வேண்டும் என்பதால் ஜெய்பிரத்யங்கிரே ஜெய் ஜெய் பிரத்யங்கிரே என்ற மந்திரத்தை இவ்வுலகிற்கு அளித்தார.

2012 ஆடி மாத சதுர்த்தசி சண்டி ஹோமம் செய்து கொண்டு இருக்கும் பொது அம்பாள் எழுந்தருளி இனிவரும் காலத்தில் ப்ரத்யங்கிரதாசன் என்று அழைக்க படுவாய் என்று உத்தரவானது, அதுபோல் ஸ்வாமிஜின் குருவான ஸ்ரீஸ்ரீதத்தகிரி சம்பாசிவா ரிஷிஷ்வர சுவாமிகள் அவரை ப்ரத்யங்கிராதாச ஸ்வாமிகள் என்று அழைக்க துடங்கியதுடன் அதுவே ஸ்வாமிஜின் பெயராக ஆனது.

ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரதேவியின் புகழையும் மகிமையும் பரப்புவதர்ககவும், ப்ரத்யகிராதேவிக்கு ஆலயம் எழுப்புவதற்காகவும் கடந்த 2013இல் ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிர பீடத்தை நிறுவிய ப்ரத்யங்கிராதாச ஸ்வாமிகள் எண்ணற்ற ஆன்மிக சேவை செய்து.அம்பாளின் அருளசியினாள் தன்னிடம் வரும் அடியர்க்லான பலதரப்பட்ட மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கூறி அவர்களின் வாழ்வில் அனந்தமும் மாகிழ்ச்சி அடையாச்சிகிறார். பிறஉயர்களுக்கு திங்கு விளைவிக்காமல் சகமனிதரை நேசித்து உண்மையை பேசி நேர்மை மற்றும் ஒழுக்க நெறி தவறாமல் ஆன்மிகத்தில் வாழ்க்கையை வழி நடத்தினால் ஆனந்தம் கிட்டி அம்பாளின் அருளாசி பெற்று இன்புற்று வழலாம் என்று ப்ரத்யங்கிராதாச ஸ்வாமிகள் இவ்வுலகிற்கு கூறிவருகிறார்.  

Address

Sri Sri prathyangiradasa Swami

No. 5, Maruti Flats (Basement),
Krishnaswami Street(Near joyalukkas),T-Nagar, Chennai-600017
Tamilnadu, India.

Telephones:

+91 -44-42024647
+91 98400 86373, 90252 33000

E-mail:

spiritualastro@gmail.com

Contact Us
Content

Contact me