vana durga peedam

Ambal

ஸ்ரீ ஜெய் ப்ரத்யங்கிரா தேவி வரலாறு ஜெய்பிரத்யங்கிரே !! ஜெய்ஜெய்பிரத்யங்கிரே !!

ஸ்ரீ ஜெய் பிரத்யங்கிரவை பற்றி தெரிந்து கொள்ளும் முன் நரசிம்மரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியதும் அவசியம் என்என்றல் விஷ்ணுவின் நான்காம் அவதாரமான நரசிம்ம மூர்தியின் உக்ரத்தை தணிக்கந்தவள் ஸ்ரீ ஜெய் ப்ரத்யங்கிரா தேவி.

ஹிரன்யகசிபு என்ற கொடிய அசுரன் திரிரோத யுகத்தில் சிவபெருமானை நோக்கி தவம் செய்தான், அவன் முன்தோன்றிய சிவபெருமானிடம் தேவர்களாலும் மனிதர்களாலும் ஆயுதத்தாலும் மிருகத்தலும் இரவிலும் பகலிலும் தான் இறக்ககூடாது என்று வரம்பெற்றான். சிவபெருமானிடம் பெற்றவரத்தினால் ஆணவம் கொண்டு மூவுலகையும் வென்று தன் அடிமையாக்கி தன்னை கடவுளாக விழிப்படகூறினான. ஹிரன்யகசிபுவின் மகன் பிரகலாதன் சதாசர்வகாலமும் நாராயணனின் நாமத்தையே உச்சரிக்கும் பழக்கம் கொண்டவனாக இருந்தான். இது அவனது தந்தையான இரண்யகசிபுவுக்கு பிடிக்கவில்லை.

ஒருநாள் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற ஹிரன்யகசிபு, ‘உன் நாராயணன் எங்கிருக்கிறான்’ என்று கேட்க, அதற்கு பிரகலாதன் ‘நாராயணன் எங்கும் இருப்பார். தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று பதிலளித்தான். கோபமடைந்த ஹிரன்யகசிபு, இந்ததூணில் இருக்கிறானா, உன் நாராயணன்? என்று கேட்டபடி தன் கதாயுதத்தால் அருகில் இருந்ததூணில் ஓங்கி அடித்தான். அப்போது அந்தத்தூணில் இருந்து சிங்கத்தின் தலையும் மனித உடலும் கூடிய மனிதமிருக தோற்றத்துடன் நரசிம்மமூர்த்தி தோன்றி ஆக்ரோஷம் கொண்டு ஹிரன்கசிபுவை தன் மடி மீது கிடத்தி மார்பினை பிளந்து குடலினை உருவி மாலையாக அணிந்து, அவன் உதிரத்தை குடித்ததால் ரஜோகுணம் மேலிட, சினம் தணியாது உக்கிரமடைந்து மூவுலகையும் பயமடைய செய்தார், தேவர்களும் முனிவர்களும் பிரம்மனிடம் சென்று நர்சிமமூர்த்தியின் உக்ரம்தணிய செய்யும்படி வேண்டினார்கள், ஆனால் அவர் இக்கோர உருவம் கொண்ட நர்சிமமூர்த்தியை நெருங்கக்கூடமுடியாது என்று கூறிவிட்டார், மனகலவரம் கொண்ட தேவர்களும் முனிவர்களும், விநாயகரை நோக்கி துதிக்க அவர்கள் முன் தோன்றிய விநாயகர் அவர்களின் கோரிக்கையை ஏற்று நர்சிமமூர்த்தியிடம் சென்று பலவிகடங்களை செய்தர் ஆனால் நர்சிமமூர்த்தியின் உக்ரம் தணியவில்லை, அச்சமடைந்த தேவர்களும் முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று முறையிட, நர்சிமமூர்த்தியின் உக்ரத்தை தணிக்க வீரபத்திரரை அனுபிவைத்தார், சிவபெர்மனின் கட்டளையை ஏற்று நரசிம்மா மூர்த்தியிடம் சென்ற வீரபத்திரர் சினம்தணிந்து இக்கோர உருவத்தினை மற்றியருளும்படி வேண்டி நின்றார், கோபம் தணியாத நர்சிமமூர்த்தி தன் கூறிய நகங்களால் குத்தி இம்சை செய்தர், வருந்திய வீரபத்திரர் சிவபெருமானை நோக்கிதுதிக்க, ஆயிரம் கோடிசூரியனைப் போன்ற ஒளியுடன் உலகேநடுங்கும் வண்ணம் ஹன்கார ஓசையுடன். பாதி உருவம் பயங்கர யாளியகவும், மறுபாதி உருவம் இரு இறுக்கைகளோடு கூடிய பயங்கிர பக்க்ஷி போன்ற உருவம் கொண்டு சரபேஸ்வரராக சிவபெருமான் தோன்றினர் உக்கிரம் தணியாத நர்சிமமூர்த்தி சரபேஸ்வரருடன் போரிட தொடங்கினர்.

சரபேஸ்வரர் ஆகாயத்தில் பறந்து தன் இறக்கைகளால் விசுரியதல் இளம்கற்று எழுந்து நரசிமரின் உக்கிரம் அடங்கியது, என்றாலும் போரை தொடரும் எண்ணம் குறையாததால், நரசிம்மர் தன்மேனியிலிருந்து கண்டபேருண்டம் எனும் பக்க்ஷி தோற்றுவித்தார் அது மேலே பறந்து சென்று சரபேஸ்வரர்ரிடம் போரிட்டது இதபோர் 18 நாட்கள்நீடித்தது , இது தொடர்வதை விரும்பாத சரபேஸ்வரர் போரை நிறுத்த தன் நெற்றி கண்ணில் இருந்து ஜுவால ரூபிணியாக ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா தேவியை தோற்று வித்தார், சரபேஸ்வரின் ஒரு இறக்கையாக ஸ்ரீ மஹா பிரத்யங்கிரவும் மற்றொரு இறக்கையாக சூலினி துர்கவும் திகழ்கிறார்கள்.

ஆயிரம்கோடி சூரியனின் ஜுவாலையுடன் ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா உருவெடுத்து நரசிம்மமூர்த்தியின் போர் குணத்தை பிரதிபலித்த கண்டபேருண்டம் எனும்ப க்க்ஷியை விழுங்கி ஜீரணம் செய்தாள்.

சிவத்வேஷத்தை ஒழிக்க இவள் உதித்ததால் உலகிற்கே மங்கலம் ஏற்பட்டது. இவளை உபாசித்து இவள் அருளைப் பெற்றுவிட்டால் அந்த ராம லக்ஷ்மணர் கூட தன்னை வெல்ல முடியாது என்பதை உணர்ந்த இந்திரஜித், நிகும்பலை என்ற இடத்தில் மிக ரகசிய மாக யாகம் செய்தான். தன்னை உபாசிப்பவன் நல்லவனா கெட்டவனா என்பதை கவனிக்கக்கூடியவள் அல்ல இவள். பிரத்யங்கிராவின் அருள் இந்திரஜித்திற்கு கிடைத்து விட்டால் அவனையாரும் வெல்ல முடியாது அறிந்த ஆஞ்சநேயர் அந்த யாகத்தை தடுத்து நிறுத்திவிட்டார்.

அந்தகன் என்ற அசுரன்பிரம்ம, விஷ்ணு மற்றும் தேவர்களாலும் தனக்கு இறப்பு வராதபடி சிவபெருமானிடம் வரம் பெற்றர ஆகந்தையில் தேவர்களை துன்புறுத்தினான், இதை பொறுக்க முடியாத தேவர்கள் சொன்னபடி செய்வதாகவும் வேண்டினர். அந்தகன் அவர்க்களை பெண் வேடம் மிட்டு வாழ்நாளை காழிக்கும்படி கட்டளையிட்டான் இதனை செய்தும் அந்தகன் அவர்களை மேலும் துன்புறுத்தினான் பொறுக்க முடியாத தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர் சிவபெருமான் பைரவரை அழைத்து அந்தகனைவதம் செய்ய கூறினார் பைரவரும் பைரவபத்தினியான மஹாப்ரத்யங்கிர துணையுடன் அந்தகனை வதம் செய்தார்.

தாரகன், தன் ரத்தம் கீழேசிந்தினால், அந்த ஒவ்வொரு சொட்டு ரத்தத்திலிருந்தும் ஆயிரம் அசுரர்கள் தோன்றும் வரத்தைப் பெற்றிருந்தான். ஒரு பெண் மூலம் தான் தனக்கு மரணம் சம்பவிக்க வேண்டும் என்ற வரத்தையும் பெற்றிருந்தான். அவனைக் கொல்ல விஷ்ணு வைஷ்ணவியையும், பிரம்மா பிராம்மியையும், மகேஸ்வரன் மாஹேஸ்வரியையும், குமரன் கௌமாரியையும், இந்திரன் இந்திராணியையும், யமதர்மராஜன் வாராஹியையும் ஷட்மாதர்களாக்கினர். அவர்கள் அறுவராலும் தாருகனைக் கொல்லமுடியாமல் போனது. அப்போது ருத்ரனின் கண்களிலிருந்து பிரத்யங்கிரா பத்ரகாளி ஆவிர்பவித்தாள்.

அவளுடன்காளீ, காத்யாயனீ, சாந்தா, சாமுண்டா, முண்டமர்த்தனி, த்வரிதா, வைஷ்ணவி, பத்ரா எனும் எட்டு சக்திகளும் தோன்றி அனைவரும் ஒன்றாகி தாருகனைக் கொன்றனர்.ஆகவே தன் அணைத்து சக்திகளையும் சக்திகளையும் கட்டுபடுத்தும்மா பெறும் சக்தியாக ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிராதேவி திகழ்கிறாள்.

சூரியனின் நெற்றியில் இருந்து தண்ணீரில் விழுந்த தனலில் உருவான தாமரை பூவில் சிவமைந்தர்களாக ஆறு குழைந்தைகள் தோன்றினார் கார்த்திகை மதர்களால் வளர்க்கப்பட்ட ஆறுமுகன் சூரபத்மனை சம்ஹாரம் செய்ய சென்ற போது அணைத்து சக்திகளின் சுறுபமான பைர பத்தினி ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவித்தான் வேலை கூடுத்த ஆசிர்வதித்து வேலயுதமாக போருக்கு அணுப்பிவைத்தாள், அம்பாளின் அருளை பெற்ற ஆறுமுகன் அறுநாட்கள் நடந்த போரில் சூரபத்மனை வென்றார். இதன் வெற்றியை மஹா கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது.

மஹா ப்ரத்யங்கிரா தேவி மகிமை

மஹா ப்ரத்யங்கிரா தேவி ஆயிரம் சிம்மமுகங்கலும். இரண்டாயிரம் கைகலும், பெரிய சரீரமமும், கரிய நிறம்மும், நீல ஆடையும் தரித்திருக்கும் மஹா ப்ரத்யங்கிரா தேவி சந்திரனைதலையில் அணிந்து, சூலம், கபாலம், பாசம், டமருகம் முதலிய ஆயுதங்களைக் ஏந்தி. தனது வலது காலை தொங்கவிட்டு, இடது காலை மடித்து சிங்கத்தின் மீது சிம்மவாகினியாய் வீற்றிருந்து திருவருள் புரிபவள்.

மஹா ப்ரத்யங்கிரா தேவி சிம்மமுகம் கொண்டு இருபதினாலே "உக்ரரூபிணி" என்ற நாமம் கொண்டுள்ளாள். மஹா ப்ரத்யங்கிரா தேவியை மஹாகாளி எனவும் , அதர்வண பத்ரகாளி எனவும், உக்ர ப்ரத்யங்கிரா எனவும் அழைக்கப்படுகிறாள். சரபரின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய சரபசக்தி ஆவாள். "பத்ர" என்றால் மங்களம் ; மங்களத்தையே செய்யக் கூடிய காளியாதலால் பத்ரகாளி என்று தேவிக்கு பெயர் அமைந்தது. இதன் படியே இவளுக்கு "பத்ரப்ரியா", "பத்ரமூர்த்தி" என பெயர்கள் விளங்குகிறாள்.

மஹா ப்ரத்யங்கிரா தேவியின் மகிமையை உணர்ந்து அவளது மந்திரங்களை இவ்உலகிற்கு அளித்தவர்கள் அங்கிரிஸ், பிரத்யங்கிரிஸ் எனும் இரு ரிஷிமார்களே. தன் மந்திரத்தை உலகிற்கு அளித்த ரிஷிகளின் பெயரைய தன் பெயராக வைத்து கொண்டவள். தன்னை அண்டியவர்கள் நல்லவர்களோ, கெட்டவர்களோ யாராயினும் அருளினைப் பொழிபவள் மஹா ப்ரத்யங்கிரா தேவி ,இவள் தேசபாவம் குரிப்பிடமுடியாதவள் அதாவது இந்த இடத்தில இருப்பாள் என்று குறிப்பிடமுடியதவள், காலபாவம் சொல்ல முடியாதவள் அதாவது எக்காலத்திலும் பக்தர்களைகாத்து இரட்சிப்பவள் , எங்கும் எதிலும் நிறைந்து இருப்பவள், சௌமியமான அழகினையும் கோர உருவினையும் கொண்ட அனந்தஸ்வருபினி, பக்தர்களிடையே கோர உருவத்தையும் இனிதாக ஏற்கின்ற சமத்துவ மனோபாவம் ஏற்படச் செய்தவள்.

அவளை மனதார வழிபடுவர்களுகு 16 செல்வங்களையும் பெற்று பெருவாழ்வுவழவைபவள். சகல ஐஸ்வர்யத்தையும் கொடுத்ததும் நேர்மையான புத்தியையும் கொடுப்பவள், நவகிரகங்களின்ரூபத்தில் இருந்து அந்த கிரகங்களினால் ஏற்படும் கேடுதல்களிருந்து காத்து இரட்சிப்பவள்.

நவகிரகத்தில் ராகு கேது மிகவலிமை வாய்ந்தவர்கள் அவர்களை ஸ்ரீ பிரத்யங்கிரா தேவிக்கு கட்டுபடுத்தும் சக்தி அந்த அளவுக்கு உக்ராமானவள். இந்த தேவிதான் அனைத்திற்கும் முடிவே, இவளை விட்டால் வேற எங்கும் போகமுடியாது. இவள் சக்தியை அளவிட முடியாது. இவளது அனுகிரகம் பெற்றுவிட்டால், நம்மை எந்த சக்தியாலும் ஜெயிக்க முடியாது. பணிவும், நல்லமனம் இருந்தால் மட்டுமே. மஹா ப்ரத்யங்கிரா தேவியை வணங்கமுடியும்.

மஹா ப்ரத்யங்கிரா தேவியை வழிபட்டாள் நம்முன்னோர்கள் செய்த கர்மவினைபாவம்கள், சாபங்கள் நம்முன்பிறவியில் செய்த கர்மவினை, இப்பிறவியில் அனுபவிக்கும் தீராத நோய்கள், குழப்பங்கள், கஷ்டங்களை தீர்த்துவைக்க, நவகிரகங்களை அடக்கி ஆளும் நவகிரஹரூபிணியான ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவியல் மட்டுமே முடியும்.

பில்லி, சூனியம், ஏவல், செய்வினைகள் போன்ற அனைத்து தீயவினைகளையும் தீர்ப்பவள் பிரத்யங்கிரா தேவி, சத்ரு பயம் ஏற்படாது இவள் நாமத்தை சொன்னாலே சத்ருபயம் நீங்கிவிடும். தீயவைகளை தன்கனல் வீசும் கண்பார்வையாலேயே அழித்துவிடுவாள். கோபத்தை நாசம் செய்பவள் கோபமுடையவர் செய்யும் தானம், யக்ஞம், தபஸ், உபாசனை எல்லாம் பச்சை மண்ணாலாகிய குடத்தில் எடுத்த ஜலம் போல போய்விடுகிறது’,

ஸ்ரீ வித்யா உபாசனை செய்பவர்களுக்கும் மனமுருகி விழிபடும் பக்தர்களுக்கும் சாதகமான பலனை அளித்து காத்து இரட்சிக்கும் மஹா சக்தியாக ப்ரத்யங்கிர தேவி திகழ்கிறாள். பிரத்யங்கிரா தேவி உக்கிரமானவள் என்றாலும் தன்னை வழிபடுவர்களுகு, கேட்டவர்க்கு கேட்டதை அருளி பக்தருக்கு உறுதுணையாய் கூடவே இருப்பவள். தன்னை உபாசனை செய்பவர்களுக்கும் சகல சம்பத்துகளையும் வாரிவழங்கும் அன்னை மஹா ப்ரத்யங்கிரா தேவியை போற்றித் துதித்து புகழை பரப்புவோம்.  Content

Contact me