vana durga peedam

Temple

ஆலய திருப்பணி      ஜெய் ப்ரத்யங்கிரே!!          ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!!

சிங்கம் எனத்துவங்கும் ஊரின் அருகில் என் அன்னை ஸ்ரீ ஜெய் ப்ரத்யங்கிராவிற்கு ஆலயம் ஸ்தாபிக்க உத்தரவு ஆனது. அன்னையின் உத்தரவு பெற்றபடியால், அந்த எண்ணத்திலேயே நான் வியாபிபித்து இருந்த பொழுது, ஒரு நாள் அஷ்டமி நடுநிசி பூஜை, முடித்து அம்பாளை தியானித்து இருந்து பொழுது, எனக்கு சிம்மம் கர்ஜிக்கும் சப்தத்துடன் இயற்கை சூழல் நிறைந்த மலை அடிவாரத்தில் சிங்கம் மற்றும் பசு கூட்டம் நிறைந்த ஒரு பகுதி என் நிஷ்டையில் தென்பட்டது.

மேலும் என் நிஷ்டையில் வெண்பாக்கம் என்ற ஊர் பெயரும் தோன்றியது. அப்படியே நிஷ்டையில் இருந்தவண்ணம் நித்திரைக்கு சென்றுவிட்டேன். காலையில் என்னை யாரோ தட்டி எழுப்பி ஆலயம் எழுப்ப இடம் காண்பித்துவிட்டேன், நீ கிளம்பலாம் என்று சொன்னார்கள். அடுத்த சில நொடிகளில் கண் விழித்துவிட்டேன், அம்பாளே நிஷ்டையில் எனக்கு உத்தரவையும் கூறி காலையில் எழுப்பி அவ்விடத்தில் செல்ல சொன்னதையும் எண்ணி பூரித்தேன். உடனே எனக்கு தெரிந்த சிலரிடம் வெண்பாக்கம் என்ற இடம் எந்த சிங்கம் எனும் பெயர் தொடங்கும் ஊருக்கு அருகில் இருக்கிறது என வினவினேன். அதற்கு என்னுடைய அடியார் இடத்திலிருந்து சிங்கப்பெருமாள் கோவில் அருகில் அப்படி ஒரு கிராமத்தை தான் என்றோ பார்த்ததாக கூறினார்

நான் உடனே தயாராகி சிங்கப்பெருமாள் கோவில் அருகில் கூறப்பட்ட வெண்பாக்கம் கிராமத்தை தேடி விரைந்தேன். அப்பொழுது காரில் நான் சென்று கொண்டிருந்தபொழுது நான் நிஷ்டையில் கண்ட அந்த ரம்மியமான இடத்தை நெருங்குவது போல் உணர்ந்தேன். சிறிது நேரத்தில் வெண்பாக்கம் கிராமத்தை அடைந்தேன். அங்கு நான் அந்த கிராமத்தில் என் வாகனத்தை விட்டு இறங்கி காலை கீழே வைத்த நொடியில் என் அங்கம் எங்கும் சிலிர்த்தது, சிம்ம கர்ஜனையும் கேட்டது, கோ கூட்டம் அவ்விடத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது. அடுத்த நொடி என் அன்னையான ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிராவிற்கு சரணாகதி நமஸ்காரம் செய்து அவ்விடத்தில் ஆலயம் எழுப்ப வேண்டியவை செய்ய துவங்கினேன். அன்னையின் அருளால் கார்ய சித்தி பெற்று சிங்கப்பெருமாள் கோவில் அடுத்து உள்ள வெண்பாக்கம் கிராமத்தில் கடந்த 6.3.2017 அன்று ஆலய ஸ்தாபித ஆரம்ப விழா நடைபெற்று 21.4.2017 அன்று பிரதிஷ்டா வைபவ விழா நிறைவடைந்து, ஆலய திருப்பணி நடைபெற்று வருகிறது. ஆலயம் எழுப்ப தங்களால் முடிந்த உதவிகள் மற்றும் உடல் உழைப்பை அளித்து குரு அருளையும் அம்பாளின் அனுக்ராஹத்தையும் பெறவும்.  

தொடர்புக்கு : ஸ்ரீ ஜெய் ப்ரத்யங்கிரா பீடம். 9025233000 / 98400 86373 / 044- 42024647.

Content

Contact me